Wednesday, August 15, 2012

Abdul Salam: இந்தியத் திருநாட்டின் 66–வது சுதந்திர தினவிழா

Abdul Salam: இந்தியத் திருநாட்டின் 66–வது சுதந்திர தினவிழா: அன்புடையீர்,   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அதிரை பைத்துல்மாலில் இந்தியத் திருநாட்டின் 66 –வது சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட...

இந்தியத் திருநாட்டின் 66–வது சுதந்திர தினவிழா

அன்புடையீர்,  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அதிரை பைத்துல்மாலில் இந்தியத் திருநாட்டின் 66–வது சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 ஹாஜி பர்கத் (ABMதலைவர்) அவர்கள் தலைமை ஏற்க ஹாஜி அப்துல் மாலிக் (ABM துணை பொருளாளர்) கிரா-அத ஓத பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி S.A.அப்துல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். ஹாஜி C.முஹம்மது இப்ராஹீம் (ABM துணைச்செயலாளர்) சுதந்திரதின விழா உரை நிகழ்த்தினார்.


ஹாஜி முஹம்மது முஹைதீன் (ABM ஒருங்கிணைப்பாளர்) ஹாஜி M.M.இப்ராஹீம் (ABM மேலாளர்) மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்

 விழாவில் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

 விழா முடிவில் ஹாஜி A.S. அஹமது ஜலீல் (ABM துணைச்செயலாளர்) நன்றியுரை நிகழ்த்த தேசிய கீதம் பாடப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டுள்ளது நகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 வஸ்ஸலாம்.

 இப்படிக்கு,

 சா. அப்துல் சலாம்


Tuesday, July 10, 2012

ட்ரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைந்துள்ளது

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில் ஜன நடமாட்டமும் குடியிருப்பு அதிகமான பகுதியுமான இடத்தில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைந்துள்ளது மட்டுமல்லாமல் அடிக்கடி தீப்பொறியும் ஏற்படுகிறது. அதில் பொறுத்தப்பட்டிருக்கும் கம்பித் துண்டுகள் எறிந்த நிலையில் உடைந்து விழுவதால் பொதுமக்கள் மிக்க பீதியுடன் உள்ளனர். பொது மக்களளின் வேண்டுகோளுக்கிணங்க பலமுறை புகார் செய்தும் சம்பத்தப் பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே நமது மின்சார ஊழிய சகோதரர் ஒருவர் மின்சார விபத்தில் பலியானார் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்கிறேன். எனவே பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இதனை வெளியிடுகிறேன்.

Monday, July 2, 2012

முன்னேற்றப் பாதையில் ‘கர்ழன் ஹஸனா’(அழகிய கடன் அறக்கட்டளை) வட்டி ஒழிப்பு முயற்சியில் சிறிய எட்டு வைத்த பங்களிப்புதான், நமதூரில் சில மாதங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட ‘கர்ழன் ஹஸனா’ ( قرضا حسنا ) எனும் அழகிய கடன் அறக்கட்டளையாகும். வட்டியின் தீங்கைப் பற்றி நம் அருள்மறை குர்ஆனும் நபிமொழிகளும் கூறும் எச்சரிக்கைகள் அப்படியே பதிவுகளாக இருக்க, நமது சமுதாயம் அன்றாடம் அனுபவித்துவரும் ‘கொடுமைகள்’ நம் கண் முன்னால் இருந்து கவலை தந்துகொண்டிருந்ததால், வட்டி அரக்கனைச் சிறு ஊசியைக் கொண்டாவது குத்தி வேதனைப் படுத்துவோம்; மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் எனும் உயர் நோக்கில் தொடங்கப்பட்ட அழகிய கடன் அறக்கட்டளை, எதிர்பார்த்ததைவிட மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது! அல்ஹம்து லில்லாஹ்! முதலில் நிர்வாகிகள் மூவரால் தொடங்கப் பெற்ற இவ்வறக்கட்டளை, அண்மையில் இன்னும் ஆர்வலர்கள் சிலரைக் கொண்டு விரிவு படுத்தப்பட்டு, பல கைகள் எழுப்பும் பேரோசையாகப் பரிணமிக்கத் தொடங்கியுள்ளது! அந்த ஆர்வலர்களின் அயராத ஒத்துழைப்பின் பயனாக, பள்ளிவாசல்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் மக்கள் கூடுமிடங்களிலும் நமதூர் மக்களைச் சந்தித்து, நன்கொடைகளாகவும் ஜக்காத் நிதிகளாகவும் நிதியைப் பெற்று, மாஷா அல்லாஹ், இப்போது இவ்வறக் கட்டளையின் வைப்புத் தொகை வளர்ச்சி பெற்றுள்ளது! சிறு வியாபாரிகளும் ஏழை அன்றாடங் காய்ச்சிகளும் எம்மை அணுகி, ஏற்கனவே அவர்கள் மூழ்கியிருந்த வட்டியிலிருந்து விடுதலை பெற்றுவருகின்றார்கள்! எமது அழகிய கடன் சேவையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.. இவ்வறக்கட்டளையின் நம்பகத் தன்மையை உணர்ந்த சிலர், தமது ‘ஜக்காத்’ நிதியைக்கூட அனுப்பிவைத்துள்ளனர் என்ற தகவலும் வாசகர்கள் அறியவேண்டிய ஒன்றாகும். முறையாகச் சட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகச் செயல்படத் தொடங்கியுள்ள இவ்வறக்கட்டளை, வட்டியில் வீழ்ந்து தமக்குக் கிடைக்க வேண்டிய முழு வருமானத்தையும் இழந்து தவிக்கும் சிறு வியாபாரிகளை இலக்காகக் கொண்டு, சேவையாற்றி வருகின்றது. நமதூரில் நன்கு செயல்பட்டு வரும் எந்தப் பொது அமைப்புக்கும் இவ்வறக்கட்டளை எதிரானதன்று என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விழைகின்றோம்.

Monday, June 11, 2012

nanri kaditham

அன்பிற்கினிய லண்டன் மாநகர் வாழ் செக்கடி பள்ளி முஹல்லாஹ் சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் அதிரை பைதுல்மால் தலைமை நிலைய நிர்வாகிகள் சார்பில் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தங்கள் எல்லோரது சார்பில், அனைத்து முஹல்லாஹ் பேரவையின் செயலர் பேரா. ஹாஜி ஜநாப் M.A. அப்துல் காதர் அவர்கள் மூலம் ரூ. 10,000/- ஏழை எளிய மாணவ மாணவிகளின் பள்ளி சீருடைக்காக, நன்கொடையாக வழங்கி உதவியுள்ளீர்கள். புதிய கல்வி ஆண்டு தொடங்கும் இத்தருவாயில் ஏழை எளிய மாணவ மாணவிகளின் அடிப்படை தேவைக்காக ஒரு உதவி யை செய்துள்ளீர்கள். தங்களை போன்றவர்கள் செய்கின்ற இதுபோன்ற உதவி களைக்கொண்டு தான் அதிரை பைதுல்மால் மக்கள் நல சேவையை தொடர்ந்து செய்ய முடிகிறது. தாங்கள் தொடர்ந்து தொடர்பு கொள்வதுடன் தாங்கள் விரும்பும் வகையில் தங்கள் விரும்பும் தொகைகளை நன்கொடையாக வழங்கி ஊக்கம் அளிக்க வேண்டுகிறோம். தாங்கள் வழங்கிய உதவிக்குப் பன்மடங்கு நன்மையை வல்ல அல்லாஹ் இம்மை மறுமையில் வழங்கிப் பேரருள் புரிவானாக, ஆமின் யாரப்பல் ஆலமீன் என நெஞ்சார துஆ செய்கின்றோம். குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 98 பேருக்கு விதவை பெண்கள் வயதானவர்கள் வருமானம் இல்லாதவர்கள்.ரூ. 300 /- வீதம் பென்சன் வழங்கப்படுகிறது. இதற்கு ஜகாத், சதகா , நன்கொடைகளை பயன்படுத்த படுகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்கும் உதவி செய்யலாம். சுன்னத் திட்டம்: ஏழை எளியபிள்ளைகளுக்கு சுன்னத் செய்ய படுகின்றது. இதற்கு ஸ்பான்சர் உதவி பெறப்படுகிறது. வஸ்ஸலாம்

Wednesday, August 17, 2011

trichy plastics


We are from Trichy Plastics Private Limited, entering into Injection mould Components Manufacturing. We have planned to start production next month, August 2011.
We have approached Bank for loan and that process is being delayed.
But we have to start the production before Sep, 2011 with out fail, because we have lot of orders to supply.
At this stage i am in need of Finance/Investment partner. Hence, if you feel that you may do something for us to promote our business, you are most welcome.
We have attached our Project Report and Certification for the Industry issued from the govrnment for your kind perusal.
Hopefully awaiting for your favorable reply.

Thanks & regards
B.M. Saleem
(For) Trichy Plastics Private Limited
Mobile:+919789952594
Email:trichyplastics@gmail.com
Web:trichyplastics.com

Monday, February 14, 2011

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ